அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி கிராமத்தில் தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை விழா நடைபெற்றது. அச்சம்பட்டி முதல் வலசை வரை இரண்டு கிலோமீட்டர் தொலைவில் 1 கோடியே 90 லட்சம் செலவில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையினை சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், கலந்து கொண்டு தொடங்கிவைத்தார்.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கதிரவன், வள்ளி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரி,திமுக ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், அருண்,ஒன்றிய துணைச் செயலாளர் வாவிடமருதூர் கார்த்திகேயன்,பேரூராட்சி தலைவர் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், துணைத்தலைவர் சுவாமிநாதன், முன்னாள்ஊராட்சி மன்ற தலைவர்கள் தனுஷ்கோடி,சேதுசீனிவாசன், தண்டலை சரவணன்,ரவிச்சந்திரன்,ஜெயபிரகாஷ்,முன்னாள் பேரூர் துணைச் செயலாளர்
கண்ணன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் நடராஜன், ஊராட்சி செயலர் முருகேஸ்வரி,ஒப்பந்ததாரர்குமார்,ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்
சந்தனகருப்பு,சோழவந்தான் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தவசதீஷ்,இளைஞரணி நிர்வாகிகள் ரியாஸ்கான், பிரவீன் பாலகிருஷ்ணன்,பண்ணகுடிபாண்டி,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.