கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூரில் போட்டியிட பாமக சுரேஷ் விருப்ப மனு..
வருகின்ற 2026 தமிழ்நாடு சட்டபேரவை பொது தேர்தல் நடைபெற உள்ளது. அதனையொட்டி சென்னையில் அமைந்துள்ள சோளிங்கநல்லூரில் பாமக மாநில ஒருங்கிணைப்பாளரும்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மு.கார்த்தி மற்றும் மாநில இணை பொதுச் செயலாளர் க.வைத்தி ஆகியோரிடம் கரூர் சட்டமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் புகழூர் க.சுரேஷ் வழங்கினார்.
உடன் கரூர் மாவட்ட அமைப்பு செயலாளர் ப.ஆ.குணசீலன், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் மாநில செயற்குழு உறுப்பினர் செ.ஞானசேகரன், மாவட்ட துணை செயலாளர் வாங்கல் சதீஸ், கரூர் மேற்கு ஒன்றிய செயலாளர் வடிவேல் மற்றும் பலர் உடனிருந்தனர்.