C K RAJAN
Cuddalore District Reporter
9488471235…
கடலூரில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் விழிப்புணர்வு பேரணியினை தொடங்கி வைத்தார்
கடலூர்,நகர அரங்கில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டத்தினை முன்னிட்டு கல்லூரி மாணவர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்ததாவது,
பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டமானது நாடு முழுவதும் உள்ள கிராமப்புற பகுதிகளின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும், கிராமங்களை நகரங்களுடன் சாலை மார்க்கமாக இணைப்பதற்காக மத்திய அரசினால் 2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். இத்திட்டம் செயல்படுத்தியதன் வாயிலாக சாலை வசதியற்ற கிராமப்புறங்களில் கூட தார் சாலை, ஃபேவர் பிளாக் சாலை உள்ளிட்ட பல்வேறு மேம்படுத்தப்பட்ட சாலை வசதிகள் ஊரக வளர்ச்சித் துறையின் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் இதுவரை 323 எண்ணிக்கையிலான சாலைப்பணிகள் 757 கி.மீ நீளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் செயல்படுத்தி 25 ஆண்டுகள் முடிவடைந்ததை முன்னிட்டு வெள்ளி விழா கொண்டாட்டம் மாநிலம் முழுவதும் கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மாணவர்கள் மற்றும் அனைத்து நிலை அலுவலர்களும் கலந்துகொண்ட சாலைப்பாதுகாப்பு பேரணி நகர அரங்கிலிருந்து அண்ணா மேம்பாலம் வரை நடைபெற்றது.
மேலும், சாலைபணிகளை அரசு விதிகளின்படி சிறப்பான முறையில் செயல்படுத்திடவும், சாலையின் தரத்தினை மேம்படுத்திடவும் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பொறியியல் பிரிவில் உள்ள அனைத்து நிலை அலுவலர்களுக்கும் சாலையின் தரம் மேம்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.புண்ணிய கோட்டி,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் ர.அ.பிரியங்கா ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் வரதராஜபெருமாள் உட்பட பலர் உள்ளனர்.