கும்பகோணம் பத்திரிக்கையாளர் சார்பில் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்டதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.

சமூக விரோதிகளால் தாக்கப்பட்ட
திருப்பூர் நியூஸ் 7 தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு தாக்கப்பட்டதை கண்டித்து கும்பகோணத்தில் பத்திரிக்கையாளர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் காந்தி பூங்கா அருகில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கும்பகோணம் பத்திரிகையாளர் நலச்சங்க தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். காங்கிரஸ் வடக்கு மாவட்ட தலைவர் லோகநாதன், அதிமுக நகர செயலாளர் ராம ராமநாதன்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன் கும்பகோணம் வர்த்தகர் சங்க செயலாளர் சத்யநாராயணன் இந்து மகாசபை மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சதீஷ் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பழ. அன்புமணி தமிழ் மாநில காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில துணைத்தலைவர் ஜெயபால், கும்பகோணம் ரயில் உபயோகிப்பாளர் சங்க பொறுப்பாளர் கிரி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினார்.

அப்போது
பத்திரிக்கையாளர் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோத கும்பல் மீது தமிழக அரசு போர்கால அடிப்படையில் கைது நடவடிக்கை எடுக்க வேண்டும், தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த சமூக விரோத கும்பல் மீது குண்டர் சட்டத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முன்னதாக தாக்குதல் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுத்திய பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ பத்திரிகையாளர் சார்பில் நன்றி தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *