தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள பல அறிவியல் துறை தோட்டக்கலை இவற்றின் சார்பில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் பட்டியலின வகுப்பு விவசாயிகளுக்கு துணை திட்டத்தின் கீழ் மா மற்றும் கொய்யாவில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி மற்றும் இடுபொருள் விநியோகத்துக்கான நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தோட்டக்கலை மற்றும் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு. முத்துராமலிங்கம் வரவேற்புரையாற்றினார் முனைவர் சரஸ்வதி முதன்மையர் பயிற்சியை தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்.

மா, மற்றும் கொய்யாவில் உயர் விளைச்சல் தரும் இரகங்கள் நீர் மற்றும் உர மேலாண்மை பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாட்டு முறைகள் பற்றி விஞ்ஞானிகள் முனைவர் சு.முத்துலட்சுமி பேராசிரியர் தலைவர் முனைவர் விஜயசாமுண்டீஸ்வரி இணை பேராசிரியர் விஞ்ஞானி முனைவர் சு முத்துராமலிங்கம் இணை பேராசிரியர் முனைவர் கே சுந்தரய்யா பேராசிரியர் முனைவர் சுகன்யா கண்ணா இணை பேராசிரியர் மற்றும் முனைவர் எம். ஞானசேகரன் இணை பேராசிரியர் ஆகியோர் விரிவாக எடுத்துரைத்தனர் பட்டியலின விவசாயிகளுக்கு இடுபொருள் உரங்கள் மற்றும் தெளிப்பான்கள் ஆகியவை விநியோகம் செய்யப்பட்டன

இறுதியில் இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர் விஜய சாமுண்டீஸ்வரி இதற்கு தமிழ்நாடு மேலாண்மை பல்கலைக்கழகம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் அதன் ஒருங்கிணைப்பாளர் முனைவர் பிரகாஷ்படேல்க்கு கல்லூரி சார்பில் நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *