கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு முன்னிட்டு டிவிங்கிள் டவுன் பாப் அப் சார்பாக கிறிஸ்துமஸ் பஜார் விற்பனை கண்காட்சி

லூலு ஹைப்பர் மார்க்கெட் வளாகத்தில் டிசம்பர் 19 ந்தேதி துவங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளதாக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் தகவல்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் ஷாப்பிங் செய்பவர்களுக்கு பிடித்தமான அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கும் விதமாக டிவிங்கிள் டவுன் பாப் அப் சார்பாக கிறிஸ்துமஸ் பஜார் துவங்கப்பட்டுள்ளது…

டிசம்பர் 19 ந்தேதி துவங்கி 21 ந்தேதி வரை மூன்று நாட்கள் லட்சுமி மில்ஸ் லூலு ஹைப்பர் மார்க்கெட் வளாகத்தில் நடைபெறுகிறது..

இந்நிலையில் இதற்கான துவக்க விழாவில் கோவையை சேர்ந்த பிரபலமானவர்கள் பலர் கலந்து கொண்டனர் கண்காட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு காட்டன் ஆடைகள்,வீட்டு அலங்கார பொருட்கள், அணிகலன்கள்,நகைகள்,விற்பனைக்கான ,நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்பாளர் சுபா தெரிவித்தார்..

குறிப்பாக ஷாப்பிங் செய்ய வருபவர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களுக்கான அரங்குகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்..

மேலும் புத்தாண்டு வரவேற்கும் விதமாக கோவை இந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் . புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது..

டிஜே பிளாக் மற்றும் பல்வேறு குழுவினர்கள் கலந்து கொள்ள இந்நிகழ்ச்சி புத்தாண்டு இரவை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அமைய உள்ளதாக ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்..

இதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் வழியாக விற்பனை செய்யப்படுவதாக கூறினர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *