கரூர் செய்தியாளர் மரியான் பாபு


கரூர் மாவட்டத்தில் இன்ஷூரன்ஸ் துறையில் 100 சதவிகிதம் எப்டிஐ உயர்வை அனுமதிக்கும் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், அனைத்து வங்கி ஊழியர் மற்றும் அதிகாரிகள், கூட்டமைப்பு சங்கங்கள், எல் ஐ சி முதல் நிலை அதிகாரிகள்சங்கம், முகவர்கள்சங்கம்,கூட்டு போராட்ட குழு கரூர் எல்ஐசி கிளை 1 வாயிலின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காப்பீட்டு கழக ஊழியர் சங்க தஞ்சை கோட்ட துணை தலைவர் பெருமாள் தலைமை ஏற்றார்.கரூர் கிளை 2ன் தலைவர் சிவராமகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார்.கரூர் மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் பிரசாந்த்,அகில இந்திய கரூர் வைசியா வங்கி அதிகாரிகள் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் ரங்கன்,
ஜிஐசி ஊழியர் சங்க செயலாளர் வித்யா கருத்துரையாற்றினர்.

எல் ஐ சி முதல் நிலை அதிகாரிகள் சங்க செயலர் கிருபா, முகவர் சங்கத்தின் நிர்வாகிகள் தணிகாசலம்,கனகசுந்தரம்,ஓய்வூதியர் சங்கத்தின் மதி வாழ்த்துரை வழங்கினர்.கரூர் கிளை1ன் செயலர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் இரு கிளை ஊழியர்கள்,அதிகாரிகள்,முகவர்கள்,ஓய்வூதியதாரர்கள் மற்றும் பொது ஜிஐசி ஊழியர்கள்,அதிகாரிகள் 100 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *