C K RAJAN
Cuddalore District Reporter
9488471235…

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட அளவிலான மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஒரு பகுதியாக பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் பசுமை பரப்பளவினை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில்,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்திடவும், எதிர்வரும் காலங்களில் காலநிலையினை சீராக்கிடும் பொருட்டு பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பசுமை தமிழ்நாடு மிஷன், கோத்தாரி இன்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் எக்ஸ்நோரா இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் ஆகியவற்றின் கூட்டாண்மையில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான மரக்கன்று நடும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் மொத்த பரப்பளவான 3,712.62 சதுர கி.மீட்டரில் தற்போது 10.2 சதுர மீ மட்டுமே பசுமை பரப்பளவு உள்ளது. தமிழ்நாடு அரசு நிர்ணயித்துள்ள 33 சதவீத பசுமை பரப்பளவினை அதிகரித்திடும் வகையில் 10 ஆண்டுகளுக்கான விரிவான செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளில் கடலூர் மாவட்டத்தில் 5.5 கோடி மரக்கன்றுகள் நடவுசெய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டிற்கு சராசரியாக 55 இலட்சம் மரக்கன்றுகள் நடவுசெய்ய திட்டமிடப்பட்டு, மரக்கன்றுகள் நடவுசெய்யப்பட்டு வருகிறது. இப்பணியில் வனத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, நகராட்சி நிருவாகம், பேரூராட்சித் துறை, மகளிர் திட்டம், நெடுஞ்சாலைத்துறை, பள்ளிக்கல்வித்துறை, வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறை ஆகிய துறைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நமது மாவட்டத்தில் பிச்சாவரம் மற்றும் கடலோரப் பகுதிகளில் அலையாத்தி காடுகள் மீளுருவாக்கம் மற்றும் விரிவாக்கப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக்காடுகள் கடற்கரை அரிப்பு, புயல், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து கடலோரப் பகுதிகளை பாதுகாக்கும் இயற்கை அரணாக விளங்குகின்றன.மேலும், உயிரியல் பல்வகைமை பாதுகாப்பிற்கும், மீன்வளம் பெருக்குவதற்கும் முக்கிய பங்காற்றுகின்றன.அனைத்து துறைகள் மூலம் ஒருங்கிணைந்து மரக்கன்றுகளை நடவுசெய்வதன் மூலம் 33 சதவீத பசுமை பரப்பளவினை விரைந்து எய்திடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.புண்ணிய கோட்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் ர.அ.பிரியங்கா, மாவட்ட வன அலுவலர் குருசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தீபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *