பா. வடிவேல் – அரியலூர் செய்தியாளர்
அரியலூரில் உள்ள எல்ஐசி கிளை அலுவலகம் முன்பு, எல்ஐசி முகவர்கள் சங்கமான லிகாய் சங்கத்தின் 22-வது அமைப்பு தின விழா நேற்று சங்கத்தின் சார்பில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
இந்த அமைப்பு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், சிஐடியூ அரியலூர் மாவட்ட துணைத் தலைவர் ஆர். சிற்றம்பலம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, லிகாய் சங்கக் கொடியை ஏற்றி வைத்து விழாவைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற முகவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு அரியலூர் எல்ஐசி கிளை லிகாய் சங்க தலைவர் என். நீலமேகம் தலைமையேற்று விழாவை நடத்தினார். கிளை துணைத் தலைவர் கே. அருள் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மேலும், அரியலூர் எல்ஐசி கிளை லிகாய் சங்க கவுரவத் தலைவர் எம். பாலசுப்பிரமணியன் விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில், அரியலூர் எல்ஐசி கிளை மேலாளர் எம். ஜெயகண்ணன், துணை மேலாளர் சி. சக்திவேல், ஊழியர் சங்க செயலாளர் ஏ. ஆபிரகாம் ஜோஸ்வா, வளர்ச்சி அதிகாரிகள் சங்க நிர்வாகி என். நந்தகுமார், லிகாய் சங்க அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் கே. கிருஷ்ணன், மாநில குழு உறுப்பினர் பி. ஆறுமுகம், கோட்ட துணைத் தலைவர் டி. மாலதி, தஞ்சை கோட்டை செயற்குழு உறுப்பினர்கள் வி. அருமைக்கண்ணு, வி. முருகானந்தம், கோட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் டி. ராஜா, எஸ். முருகேசன், சங்கப் பொருளாளர் எஸ். செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
விழாவின் இறுதிப் பகுதியில், லிகாய் சங்க நிர்வாகிகள் மற்றும் முகவர்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. குறிப்பாக,பாலிசிதாரர்களுக்கு வழங்கப்படும் போனஸ் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்
முகவாண்மை காலம் உள்ளவர்களுக்கு உரிய காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் முகவர்களின் கமிஷன் குறைப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிட்டு, பழைய கமிஷன் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்
காப்பீட்டுத் துறையில் 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த 22-வது அமைப்பு தின விழா, லிகாய் சங்கத்தின் ஒற்றுமையையும், முகவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் சங்கம் தொடர்ந்து போராடும் உறுதியையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்றது.