தஞ்சாவூர், டிச- 20. தஞ்சாவூர் பனகல் கட்டிடம் அருகே தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கருப்பு சாமி தலைமை தாங்கினார்.

மேற்கு வட்ட தலைவர் ராஜன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் குணசேகரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். முன்னாள் மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம் மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜரெத்தினம், சண்முகம், அமுதன், மாவட்ட பொருளாளர் கோவிந்தன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாநிதி கிழக்கு வட்ட தலைவர் சத்தியசீலன் செயலாளர் ஜெயராமன் மேற்கு வட்ட செயலாளர் மருதமுத்து பூதலூர் வட்டத் தலைவர் கருணாகரன் செயலாளர் ஆறுமுகம் செங்கிப்பட்டிக் கிளை செயலாளர் சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில தணிக்கையாளர் சுரேஷ்குமார் ஓய்வு பெற்ற காவலர் நலச் சங்கம் மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி கொள்கை பரப்பு செயலாளர் ஜெயராமன் தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலத் தலைவர் எழிலரசன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் நடராஜன் ஏஐடியுசி மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரக்குமார் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.

முடிவில் செங்கிப்பட்டிக் கிளை தலைவர் சரவண.பால்ராஜ் நன்றி கூறினார். அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஓய்வூதியர்கள் தொழிலாளர்களுக்கு 2021-ல் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். சிபிஎஸ் திட்டத்தை ஒழித்து ராஜஸ்தான் சட்டீஸ்கர் போன்று பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

பின்னர் தஞ்சை பெசன்ட் அரங்கில் ஓய்வூதியர் தின விழா நடந்தது. விழாவில் மாநில மதிப்புறு தலைவர் கங்காதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். முடிவில் மாநில செயற்குழு உறுப்பினர் கருணாநிதி நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *