தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்
தாராபுரத்தில் 2 கிலோ கஞ்சா போதைப் பொருளை போலீஸார் பறிமுதல் செய்து, நடவடிக்கை மேற்கொண்டனர்.
தாராபுரம் பகுதியில் போதைப் பொருள் பயன்பாடு உள்ளதா என தாராபுரம் மதுவிலக்கு உதவி ஆய்வாளர் லோகநாதன், தலைமைக் காவலர்கள் பாலகிருஷ்ணன், ஞான வெங்கடேஷ் உள்ளிட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு படையினர் வெள்ளிக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இதில், தாராபுரம் நகரம், பொள்ளாச்சி சாலை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரித்ததில், அவர் பல்லடத்தில் குடியிருக்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அஜய் சஹானி (37) என்பதும், அவர் விற்பனை செய்வதற்காக சுமார் 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா போதைப் பொருளை பறிமுதல் செய்த போலீஸார், அஜய் சஹானி மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, தாராபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.