வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
திண்டுக்கல்லில் நயாகரா அருவி மற்றும் அதிசய கடல்கன்னி பொருட்காட்சி திறப்பு விழா நடைபெற்றது.
திண்டுக்கல் வத்தலகுண்டு சாலை, கருப்பண்ண சாமி கோவில் அருகில் உள்ள மைதானத்தில் ஃபுட் அண்ட் பேண்டஸி நிறுவனம் சார்பில் நயாகரா அருவி மற்றும் அதிசய கடல் கன்னி பொருட்காட்சி திறப்பு விழா நடைபெற்றது.
இதில் மெர்சி பவுண்டேஷன் நிறுவனர் மெர்சி செந்தில்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழக செயலாளர் அரசன் சண்முகம் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் கண்காட்சியை கண்டு களித்தனர்.