C K RAJAN
Cuddalore District Reporter
9488471235…

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,

காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் விரைந்து முடிக்க வேண்டும்..
எனவும் மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். கலந்தாய்வு கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் K.கோடீஸ்வரன், V. ரகுபதி மற்றும் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள்,காவல் ஆய்வாளர்கள் பங்கேற்றனர். கலந்தாய்வு கூட்டத்தில் மாவட்ட காவல்துறையில் கடந்த நவம்பர் மாதம் மெச்சதகுந்த பணிபுரிந்த துணைக் காவல் கண்காணிப்பாளர் E.பாலகிருஷ்ணன்.
காவல் ஆய்வாளர்கள் அம்பேத்கார், சந்துரு, தர்மலிங்கம், பிரேம்குமார், பார்த்தசாரதி, திருமதி.பாரதி, சிவானந்தன், உதவி ஆய்வாளர்கள் குப்புசாமி, தவச்செல்வம், திருமதி. உத்திரமாள், நடராஜன், சுரேஷ்முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என 55 காவல்துறையினருக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *