கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூரில் செவிலியர்களின் காத்திருப்பு போராடத்திற்க்கு பாமக ஆதரவு..
கரூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவ கல்லூரி மருத்க்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் சங்கம் நடத்தும் இரண்டாம் நாள் காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது.
இவ்வார்பாட்டத்திற்க்கு ஆதரவாக கரூர் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பிரேம்நாத் போராட்டம் நடக்கும் இடத்திற்கு சென்று பாமக சார்பில் ஆதரவினை தெரிவித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது திமுக தேர்தல் அறிக்கையின் 356-வது வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழ்நாடு முழுவதும் தொடர் காத்திருப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
9 ஆண்டுகள் முன்பு எம்ஆர்பி தேர்வு எழுதி முறையாக வந்துள்ளோம்.ஆனால் மருத்துவத் துறையில் மருத்துவர்கள், மருந்தாளுநர் எம்ஆர்பி தேர்வு எழுதி வந்த உடனே பணி நிரந்தரம் செய்யப்படுகிறார்கள்.செவிலியர்களுக்கு மட்டும் விதிவிலக்கா இன்று வரை பணி நிரந்தரம் செய்யவில்லை.
கடந்த
அதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், அனைத்து எம்ஆர்பி செவிலியர்களுக்கும் பணி நிரந்தரம்,சம வேலைக்கு சம ஊதியம், ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தர செவிலியர் மற்றும் 3நிலை செவிலியர் கண்காணிப்பாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும், பழைய முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனஉள்ளிட்ட பத்து அம்சகோரிக்கைகளைவலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்திற்க்கு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாமக கந்தன்,வெங்கட் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.