மதுரைப் பேராயர் அந்தோணிசாமி சவரிமுத்துவின் கிறிஸ்து பிறப்பு வாழ்த்துச் செய்தி.
உலகெங்கும் வாழும் மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் கிறிஸ்து பிறந்த நாளில் கிறிஸ்து பிறப்பின் வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிறிஸ்துவின் பிறப்பு வெறும் செய்தி அல்ல. இப்பிறப்பு உலகுக்கு அளிக்கப்பட்ட நற்செய்தி உலகில் மானுட மகனாய் உருவெடுத்து. உலகிற்கு ஒளியூட்டிய இவர், புத்துலகை படைத்த பெரியவர் இவர்.இவர் பிறந்த இந்நாளை உலகோர் கொண்டாடுவது என்பது வெறும் அடையாளம் அல்ல ஒவ்வொரு பரிமாணமும் அர்த்தம் உள்ளவை; கனிந்த கொண்டாட்டத்தின் உள்ளடக்கத்தால் செறிந்தவை ஆகும்.
பூவுலகின் வரலாறை புரட்டிப் போட்ட இயேசுவின் பிறப்பில் உலகு சந்தித்த அதிசயங்கள் பல; விந்தைகள் பல; கிறிஸ்துவின் தோற்றத்திற்குப் பின் உருவான மானுட வளர்ச்சி நோக்கில் உருவான அனைத்து சிந்தனை வடிவங்களிலும், கருத்தியல் புரட்சிகளிலும் இயேசு தந்த நற்செய்தியின் சாயல் உண்டு. நற்செய்தியின் உருவகமாய் நின்ற இயேசு, இன்றைய உலகின் அனைத்து தேவைகளுக்கும் பரிகாரியாய் இருப்பது போல், எழும் அனைத்துப் பிரச்சனைகளின் விடியலுக்கும் வழிகாட்டு நெறியாளராயும் உள்ளார்.

இந்தியாவில் கிறித்தவம் இயேசுவின் சீடருள் ஒருவரின் காலத்தில் உருவான ஒன்று எண்ணிக்கையில் கிறித்தவம் ஒரு மறை என்ற நிலையில் சிறுபான்மை
யினரை உள்ளடக்கியதாக இருப்பினும்,இந்தியக் கிறிஸ்தவம் அதன் எண்ணிக்கையை
யும் கடந்து நாடு முழுவதும் அதன் அரிய மானுடப் பணியாய் தன் இருப்பை (Presence) நிலைநிறுத்தியுள்ளது.

இயேசு காட்டிய சமத்துவம், சகோதரத்துவம், இறையாண்மை என்பனவல்லாம் இந்தியர் சமூகத்தின் வழிகாட்டு நெறிகளாக இருப்பது கண்கூடு. இந்தியக் கிறிஸ்தவம், தன் தனித்த அடையாளங்களைத் காத்துக் கொள்ள உறுதி கொண்டிருந்தாலும், அனைத்துச் சமூகங்களோடும் அனைத்து சமயங்களோடும் நட்புறவு கொள்ளவும். அதன்மூலம் சமூக நல்லிணக்கத்தை பேணவும் உறுதியேற்கிறது.

கிறிஸ்து முன்வைத்த மக்களின் மேன்மையை, வாழ்நெறியாக்குவதை உறுதியுடன் செயற்படுத்த முன்னிற்க துணிவோம்.உலகில் தோன்றி உலகுக்காய் வாழ்ந்து மடிந்த இயேசு பிறந்தநாளில், இவர் பிறப்பை கொண்டாடி மகிழும் அனைவர்க்கும் மாமதுரை கிறித்தவ கத்தோலிக்கப் பேராயம் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது, என தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *