திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் சேனியர் தெருவில் உள்ள ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி மடத்தில் வருடந்தோறும் மூன்று நாட்கள் ஆஞ்சநேய ஸ்வாமி ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு 54- வது ஆண்டு ஜெயந்தி விழா நேற்று முன்தினம் 19- ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், ஸ்ரீ ஆஞ்சநேயர் ஹோமம், திருமஞ்சனம்,பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்று, சங்கடங்கள் தீர்க்கும் ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமிக்கு திருமஞ்சன அபிஷேகம், தீபாராதனை,புஷ்ப அலங்காரம் வெள்ளி கவசம் சாற்றுதல் நடைபெற்றது. நிகழ்ச்சியை சைவ ஆகம ரத்தினம் விசலூர் வேதசிவ ஆகம திலகம் எஸ்.கங்காதர குருக்கள் சிறப்பாக செய்தார். நேற்று 20-ந்தேதி சனிக்கிழமை காலை 8 மணிக்கு திருபுவனம் ஸ்ரீ லெட்சுமி நரசிம்ம ஸ்வாமி பஜனை குழுவினர், வலஙகை எஸ்.விஜயபிரகாஷ் மங்கள இசை குழுவினருடன் சார்ட் வாகனத்தில் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி வீதியுலா காட்சி நடைபெற்றது.
பகல் 1 மணிக்கு ஸ்வாமிக்கு தீபாராதனை மற்றும் அறுசுவை அன்னதான விருந்து நடைபெற்றது. மாலை 6 மணிக்கு மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளிதர ஸ்வாமிஜி அவர்களின் சீடர் சேங்கனூர் எம்.உத்தவதாஸ் அவர்களின் “மதுர கீதம்” “ஸ்ரீ ராம நாமத்தின் மகிமை” என்ற தலைப்பில் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் பஜனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு திருப்பூர் மாவட்டம் தாராபுரம், அமிர்தா ஆர்ட்ஸ் அகாடமி நாட்டிய பேரொளி, முனைவர் பட்ட ஆய்வாளர், திருநங்கை, பரத கலைஞர் குரு தி.ராஜகுமாரி, தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஜெய நிருத்தியாலயா நடனபள்ளி, நாட்டுவாங்க கலைமணி, பரதக்கலை மணி, அபிராமி கார்த்திகேயன் அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இன்று 21- ந்தேதி காலை 10- மணிக்கு விடையாற்றி, குடந்தை சிவ லலிதா, லலிதா சகஸ்ரநாம பாராயணம் மண்டலி குழுவினர் பஜனையுடன் ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமிக்கு திருமஞ்சன அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆஞ்சநேய தாஸன் வலஙகை என்.ராமச்சந்திரன்- வசந்தா, பி.ஆர்.சண்முகம்- அங்கையற்கன்னி குடும்பத்தினர், சென்னை பப்பு சகோதரர்கள் மற்றும் வலஙகை நகரவாசிகள் சிறப்பாக செய்திருந்தனர்.