மேட்டுப்பாளையம் சச்சிதானந்த ஜோதி நிகேதன் சர்வதேச பள்ளியில் கோயம்புத்தூர் இந்திய தர நிர்ணய அமைப்பின் கிளை அலுவலகத்துடன் இணைந்து தர கழகம் துவங்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளியின் செயலாளர் முனைவர் கவிதாசன் அவர்கள் தலைமை உரை ஆற்றும் பொழுது மாணவர்கள் தரத்தின் தூதுவர்களாக மாற வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் ஒழுக்கம் மற்றும் தரநிலைகள் என்பது வெறும் தொழில்நுட்ப தேவைகள் மட்டுமல்ல அவை நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் அத்தியாவசிய வாழ்வியல் மதிப்புகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக பள்ளியின் முதல்வர் முனைவர் உமாமகேஸ்வரி வரவேற்புரை ஆற்றினார். மேலும் நிகழ்ச்சியில் இந்திய தர நிர்ணய அமைப்பின் கோவை கிளை முதுநிலை விஞ்ஞானி திருமதி. பவானி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தரமான பாரதத்தை உருவாக்குவதில் இளைஞர்களின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார் துவக்க விழாவில் கழகத்தின் செயல்பாடுகளை கண்காணிக்க வழிகாட்டி ஆசிரியர் மற்றும் மாணவ உறுப்பினர்கள் முறைப்படி நியமிக்கப்பட்டனர்.
இதன் ஒரு பகுதியாக பாதுகாப்பே முதன்மை: தரநிலைகள் உங்களை எவ்வாறு பாதுகாக்கிறது என்ற தலைப்பில் மாணவர்களுக்கான சுவரொட்டி தயாரிக்கும் போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.