நடக்க முடியாத மாற்று திறனாளி பெண் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கற்பகவல்லி வயது 26 மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது எனக்கு இரண்டு கை மற்றும் இரண்டு கால்கள் பாதிக்கப்பட்ட எனக்கு வறுமையில் வாடுகிறேன் எங்களது குடும்பத்திற்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் இதுவரை வீடு மற்றும் அரசு வேலை வழங்காமல் உள்ளது எனது தாய் தந்தை இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்

நான் பி.காம் படித்துள்ளேன். கை கால்கள் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதால் நடக்க முடியாத சூழ்நிலை உள்ளேன் நாங்கள் குடியிருக்கும் வாடகை வீடு மழைக்காலங்களில் முழுவதும் மழை நீர் தேங்குகிறது வீட்டிற்குள் பாம்பு மற்றும் பூச்சிகள் இரவு நேரங்களில் வருகிறது

இதனால் எங்களது குடும்பம் நான் மிகவும் சிரமப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ஆகையால் எனக்கு கலைஞர் கனவு திட்டத்தின் கீழ் வீடு வழங்க வேண்டும் மேலும் அரசு வேலை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரண்டு கை கால்களை இழந்த பெண் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *