செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி மேம்பாலம் அருகே அமைந்துள்ள சிதலமடைந்த அம்பேத்கர் சிலை மாற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம்
அம்பேத்கர் மக்கள் படை இயக்கம் சார்பில் நிறுவனத் தலைவர் டாக்டர் மு.மதிபறையனார் ஆலோசனைப்படி மனு வழங்கினர்.

அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கர் முழு திருஉருவ சிலை கை, கால்கள் முழு உடல் உடைந்து சிதலமடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்நிலையில் 1994-ம் ஆண்டு மே-5ம் நாள் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான ராமகிருஷ்ணன் தலைமையில் நிறுவப்பட்ட சிலை இன்றைய தேதி வரை 30 ஆண்டுகள்
கடந்ததாக கூறப்படுகின்றனர்.

இந்நிலையில் டாக்டர் அம்பேத்கர் சிலை எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் சூழல் உள்ளதாக பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.ஆகவே இது குறித்து அம்பேத்கர் மக்கள் படை செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் பொரங்கால்
டாக்டர் மு.கோபன்ராஜ் தலைமையில் டாக்டர் அம்பேத்கர் முழு திருஉருவ சிலையை வெண்கலத்தில் அமைக்க வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அப்போது சோத்துப்பாக்கம் வழக்கறிஞர் வீ.கமல்தாசன் உடனிருந்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *