கோவையில் தமிழ்நாடு வாள் வீச்சு சங்கம் மற்றும் கோயமுத்தூர் வாள் வீச்சு சங்கம் சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான வாள் வீச்சு போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 100 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனையர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..
ஒலிம்பிக் விளையாட்டில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஃபென்சிங் (Fencing) எனும் வாள் வீச்சு விளையாட்டு போட்டிகளில் தமிழக மாணவ,
மாணவிகள் கூடுதல் கவனம் செலுத்தும் விதமாக வாள் வீச்சு போட்டிகள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன..
இந்நிலையில் கோவையில் தமிழ்நாடு வாள் வீச்சு சங்கம் மற்றும் கோயமுத்தூர் வாள் வீச்சு சங்கம் ஆகியோர் இணைந்து மாநில அளவிலான வாள் வீச்சு விளையாட்டு போட்டி சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது..
ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலருக்கிம் தனித்ரனியே இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இதற்கான துவக்க விழா தமிழ்நாடு வாள் வீச்சு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கருணாமூர்த்தி,தலைவர் சுப்பையா தனசேகரன் மற்றும் கோயமுத்தூர் வாள் வீச்சு சங்கத்தின் செயலாளர் தியாகு நாகராஜ், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதில் அடாக் கமிட்டி உறுப்பினர்கள் கிருஷ்ணன்,குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இதில் சிறப்பு விருந்தினர்களாக சிவசுரேஷ் மற்றும் ரவிசங்கர் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர். ,
ஜூனியர் பிரிவில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில்,சென்னை,கோவை,திருச்சி,மதுரை,கன்னியாகுமரி,நாமக்கல்,சேலம்,தஞ்சாவூர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 100 க்கும் மேற்பட்ட வீரர்,வீராங்கனைகள் கலந்து கொண்டனர் இதில் ஃபாயில், சேபர், எப்பி ஆகிய மூன்று பிரிவின் கீழ், போட்டிகள் நடைபெற்றன…
இதில் தேர்வு செய்யப்படும் வீரர்,வீராங்கனைகள் ஜனவரி மாதம் ஒடிசா மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்ப்பட இருப்பதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்..
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கோயமுத்தூர் மாவட்ட வாள் வீச்சு சங்கத்தின் நிர்வாகிகள் சிவமுருகன்,விமல் பிரசாத்,சரவணன் உட்பட உறுப்பினர்கள் மேற்கொண்டனர்..