கோவையில் நடைபெற்ற, மாநில அளவிலான அமர்வு கைப்பந்து போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாற்றுத்திறனாளி வீரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..

கோவையில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னட்டு மாநில அளவிலான சிட்டிங் வாலிபால் போட்டி கோவை நேரு ஸ்டேடிய உள் அரங்கில் நடைபெற்றது..

தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக கோயம்புத்தூர்,பாரா வாலிபால் சங்கம் சார்பாக நடைபெற்ற இதில்,கோவை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, தருமபுரி,, திருப்பூர், கிருஷ்ணகிரி,ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து, மாற்றுத்திறனாளி வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.

முன்னதாக போட்டிகளை கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி மற்றும் தி.மு.க.கோவை மாநகர் மாவட்ட செயலாளர் துரை செந்தமிழ்செல்வன் ஆகியோர் துவக்கி வைத்தனர்..

லீக் சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்ற நிலையில், இறுதி போட்டியில் கோவை மற்றும் கன்னியாகுமரி ஆகிய அணிகள் மோதின இதில் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் முதல் இரண்டு செட்களிலும் கோவை அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது..

இரண்டாம் இடத்தை, கன்னியாகுமரி அணியும், மூன்றாம் இடத்தை கிருஷ்ணகிரி அணியும் பிடித்தன இதனை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில்,கோயம்புத்தூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி மற்றும் சிவ விலாஸ் ஸ்வீட்ஸ் நிறுவனத் தலைவர் முருகானந்த பாண்டியன் ஆகியோர் இணைந்து வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகளும் பரிசு தொகைகளும் வழங்கி பாராட்டினர்…

இந்நிகழ்ச்சியில், ஸ்பான்சர்களாகிய சரவணகுமார், கணேஷ் குமார், முத்துக்குமார். ஆகியோர் உடன் இருந்தனர் மேலும் அனைத்து ஏற்பாடுகளையும் பாரா வாலிபால் அசோசியேசன் ஆப் கோயம்புத்தூர் ஒருங்கிணைத்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *