செங்குன்றம் செய்தியாளர்
கொளத்தூர் , ராஜமங்கலம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் சென்னை கார் வியாபாரிகள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவும் முப்பெரும் விழாவும் நடைபெற்றது
இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக வியாபாரிகள் சங்க தலைவர் விக்ரமராஜா , கார் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் முரளி , செயலாளர் நவீன் குமார், பொருளாளர் சுரேஷ், செயல் தலைவர் நாகூர் மீரான் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சதீஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் வியாபாரி சங்க தலைவர் விக்ரமராஜா கார்ப்பரேட் நிறுவனங்களின் தலையீடுகள் கார் வியாபாரத்தில் தலையிட அனுமதிக்க முடியாது என்றும் அதை அனுமதிக்காமல் அரசிடம் இருந்து அனைத்து சலுகைகளையும் பெற்று தருவதாகவும் , அதேபோல் கார்ப்பரேட் நிறுவனங்கள் அதை மீறியும் உள்ளே வந்தால் சென்னை கார் வியாபாரிகள் சங்கம் சார்பிலும் வியாபாரிகள் சங்கம் சார்பிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் என அறிவித்தார்.
கார் வியாபாரிகளை பாதிக்கும் விதத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கான செயல்பாடுகளில் கார் விற்பனையாளர் சங்கங்கள் செயல்படும் என்றும் அதற்கு வியாபாரி சங்கங்களோடு இணைந்து செயல்படுவோம் என்றும் சென்னை கார் வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் இரா முரளி தெரிவித்தார்.இதில் கார் வியாபாரிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.