தாராபுரம் செய்தியாளர் பிரபு
குண்டடத்தில் “என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” செயல்விளக்க கூட்டம் – அமைச்சர்கள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள குண்டடம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய குமாரபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே, தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக கழகத் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, பாகம் எண்.34க்கான “தமிழ்நாடு தலைகுனியாது – என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி” என்ற தலைப்பில் செயல்விளக்க கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு, திருப்பூர் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் தலைமை வகித்தார். இதில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினர்.
மேலும், குண்டடம் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், சடையபாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அமைச்சர் சாமிநாதன் மற்றும் அமைச்சர் கயல்விழி ஆகியோர், தமிழ்நாடு அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கினர். மேலும், வாக்குச்சாவடி வாரியாக கட்சிப் பணிகளை வலுப்படுத்தி, வரவிருக்கும் தேர்தல்களில் திமுகவின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என தொண்டர்களை கேட்டுக் கொண்டனர்.
முதலமைச்சரின் தலைமையில் செயல்பட்டு வரும் திமுக அரசு, அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், அந்த நம்பிக்கையை மக்கள் வாக்குச்சாவடிகளில் வெளிப்படுத்த வேண்டும் எனவும் அமைச்சர்கள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சி, தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியதாக கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.