திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே நன்னிலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நார்த்தாங்குடி கூட்டுறவு சங்க வளாகத்தில் முன்னாள் அமைச்சரும், நன்னிலம் சட்டமன்ற தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.காமராஜ் தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பொது விநியோக அங்காடி கட்டிடத்தை திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் எனது தொகுதியான நன்னிலம் தொகுதிக்கு சேவை ஆற்றவே நான் இரண்டாம் பிறவி எடுத்துள்ளேன். நான் செய்வதை தான் சொல்வேன், நான் சொல்வதுதான் என் செயல்பாடக இருக்கும். நன்னிலம் தொகுதிக்கு பணியாற்றுவதை என் தலையாய கடமையாக நினைக்கிறேன் என பேசினார்.

இந்நிகழ்வில் வலங்கைமான் கிழக்கு ஒன்றிய செயலாளர் யூ.இளவரசன், மேற்கு ஒன்றிய செயலாளர் குமாரமங்கலம் கே.சங்கர், பொதுக்குழு உறுப்பினர் ஆலங்குடி ராணி துரைராஜ், வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமணி, முரளி மற்றும் பொது விநியோக திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் ராமலட்சுமி, ஒன்றிய துணை செயலாளர் ரஷ்யா இளங்கோவன், மாவட்ட பிரதிநிதி ஹாஜா மைதீன், முன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர் செல்வம், செயலாளர் காமராஜ், அவைத் தலைவர் செல்வராஜ் மற்றும் நார்த்தாங்குடி, பாப்பாக்குடி ஊராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் பயனாளிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *