வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாததை கண்டித்து உயிர்நீத்த பூர்ண சந்திரன் குழந்தைகளின் கல்வி செலவுக்காக பாதாள செம்பு முருகன் குடும்பத்தார் சார்பாக ₹5 லட்சம் நிதியுதவி
மதுரை மாநகர் நதிமேடு மருது பாண்டியர் தெரு பகுதியைச் சேர்ந்த பூர்ண சந்திரன் எம்பிஏ பட்டதாரியான இவர் மருந்து இது விற்பனை பிரதிநிதியாகவும், சிறிய சரக்கு மூலமாக பழங்கள் விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாததை கண்டித்து மதுரை பெரியார் சிலை அருகே போலீஸ் பூத்துக்குள் சென்று பூர்ண சந்திரன் உயிர்நீத்த
பூர்ண சந்திரன் மறைவுக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்த நிலையில்
திண்டுக்கல் மாவட்டம் இராமலிங்கம் பட்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் திருக்கோவில் குடும்பத்தார் சார்பாக பூர்ண சந்திரன் மனைவி இந்துமதி இவரது மகன்கள் சிவனேசன் , இனியன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டதோடு, பூர்ண சந்திரன் மகன்கள் கல்வி செலவுக்காக பாதாள செம்பு முருகன் குடும்பத்தின் சார்பாக அறங்காவலர் சேது பாலகிருஷ்ணன் அவர்கள் ரூ 5 லட்சம் ரூபாய் நிதி உதவி பூர்ண சந்திரன் மனைவி இந்துமதி வங்கிக் கணக்கில் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.