திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 கிராம ஊராட்சிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பான சமூக தணிக்கை கிராம சபை கூட்டம் இரண்டு பிரிவுகளாக சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது.
வலங்கைமான் அருகே விளத்தூர் ஊராட்சியில் 2024-25 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட 14 பணிகள் மேற்கொள்ளப் பட்டது.
இப்பணிகள் தொடர்பான சமூக தணிக்கை கடந்த நான்கு நாட்களாக பதிவேடுகள் பராமரிப்பு,100 நாள் வேலைத் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் நேரடி கள ஆய்வு உள்ளிட்டவை நடைபெற்று வந்த நிலையில் நேற்று கிராம சபை கூட்டம் 100 நாள் பணிகளில் ஈடுபடக்கூடிய சுதா தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. முன்னதாக ஊராட்சி செயலாளர் ராஜமாணிக்கம் அனைவரையும் வரவேற்று பேசினார். கெளதமி தீர்மானங்களை பதிவு செய்தார்.
கூட்டத்தில் வட்டார வள அலுவலர் தணிக்கை வினோத் கலந்து கொண்டு பேசுகையில், இவ்வூராட்சியில் இதற்கு முன்பாக 10 சமூக தணிக்கை கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றுள்ளதாகவும், தற்போது 11 வது கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. என்றும் 100 நாள் பணியாளர்கள் மரக்கன்றுகள் நடும் பணியினை அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அதனையடுத்து மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாரியப்பன், கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார். கிராம சபை கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வ முத்துக்குமரன் மற்றும் 100 நாள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.