மதுரை கீழவெளி வீதி தூய மரியன்னை ஆலயத்தில் மதநல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இந்து, இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

முருகன் வேடமிட்ட குழந்தை கேக் வெட்டினார். பின்னர் அங்கு வந்திருந்த இஸ்லாமியர்கள், தேவாலய பங்குத்தந்தை மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் கிறிஸ்துமஸ் கேக்குகள் வழங்கப்பட்டது.

ஆலயத்தின் பங்குத்தந்தை ஹென்றி ஜெரோம் சேசு அனைவருக்கும்கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார். மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் கவுன்சிலர் தமிழ்ச்செல்வி மற்றும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழுவின் பொருளாளர் ஜான்சன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *