ஈரோடு மாவட்டம், அந்தியூர் யூனியன் அலுவலகம் முன்பு, தி.மு.க., சார்பில், 100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயரை நீக்கியதை கண்டித்து‌ நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்தியூர் தி.மு.க., எம்.எல்.ஏ., வெங்கடாசலம் தலைமை வகித்தார்.

அந்தியூர் தொகுதியில் உள்ள சங்கராப்பாளையம், சின்னத்தம்பி பாளையம், கெட்டிசமுத்திரம், எண்ணமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 300-க்கும் மேற்பட்டோர் மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்‌.

இதில், பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் துணைத் தலைவர் பழனிச்சாமி, இளைஞர் அணி தி.மு.க., மாவட்ட துணை அமைப்பாளர் பிரகாஷ், வி.சி.க., வடக்கு மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் ரமேஷ் மற்றும் தோழமை கட்சியினர் பலர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *