தமிழக முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக நிறுவனருமான பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் 38வது ஆண்டு நினைவுநாள் தமிழகம் முழுவதும் இன்று அனுசரிக்கபடுகிறது.

அதையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக ஓ.பி.எஸ் அணி தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் காஞ்சிபுரம் காந்தி சாலை பகுதியில் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட செயலாளர் முத்தியால்பேட்டைஇ. ஆர்.வி.ரஞ்சித்குமார் தலைமையில் ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கற்பூர தீபாராதனை காண்பித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.அதன் பிறகு ஏராளமான பொதுமக்களுக்கும்,கட்சி தொண்டர்களுக்கும் ஆயிரம் பேருக்கு அன்னதானமாக காலை உணவு இட்லி பொங்கல் வடை கேசரி வழங்கினர்.

சுடச் சுட ஆவி பறக்க அதிமுக ஓ.பி.எஸ் அணி தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு அணியினர் வழங்கிய காலை உணவை பொதுமக்கள் ரசித்து ருசித்து உண்டு மகிழ்ந்து சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் அமைப்பு செயலாளர்கள் கே. கோபால், சோமமங்கலம் ரமேஷ், மாவட்ட நிர்வாகிகள் ஏ. வஜ்ரவேலு, ஷகிலா, ஏ. பழனி, ஒன்றிய செயலாளர்கள் அருண், மாலிக் பாஷா, கோவிந்தராஜ், மாகறல் சசி, முனிரத்தினம், பேரூராட்சி செயலாளர்கள். ஜெயகாந்தன், குலசேகரன், அணி செயலாளர்கள். பூக்கடை ஜகா, சந்திரசேகர், ஜெயபிரகாஷ், விமல், படப்பை பாபு, விஜயன், சாந்தி, சக்தி கன்னி வேல், பகுதி செயலாளர்கள். முரளி, பாபு, சதீஷ், தினேஷ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *