திருச்சி கே. கே. நகர் பகுதியில் வாகனங்களில் கிராவல் மண் கடத்தப்படுவதாக புவியியல் மற்றும் கனிமவளத் துறைக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி புவியியலாளர் விஷ்வா தலைமையிலான அதிகாரிகள் கே. கே. நகர் உடையான்பட்டி ரயில்வே கடவுப் பாதை அருகே ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் இருந்த 4 யூனிட் கிராவல் மண் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், லாரி ஓட்டுநரான புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த எஸ். முத்து (34) என்பவரைப் பிடித்து கே. கே. நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மண்னை
க.மாரிமுத்து.