எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்க சட்டம் கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்க சட்டம் கொண்டு வந்த ஒன்றிய பாஜக அரசையும் ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்
காங்கிரஸ் கட்சி மாநில பொதுச் செயலாளர் கனிவண்ணன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வீரராஜ் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சிங்காரவேலன் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தாமு இனியவன், மதிமுக தணிக்கை குழு உறுப்பினர் செந்தில் செல்வன் , மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் முபாரக் அலி, திராவிட கழக ஒன்றிய தலைவர் சந்திரசேகரன்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொகுதி செயலாளர் ரமேஷ், முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தியடிகள் பெயரை நீக்க மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன
ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இராம இளங்கோவன் முத்து மகேந்திரன், ஜி என் ரவி, திமுக மாவட்ட பொருளாளர் அலெக்ஸாண்டர், சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் , திமுக ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், பஞ்சு குமார், நகர செயலாளர் சுப்பராயன் , காங்கிரஸ் கட்சி மாவட்ட ஓபிசி தலைவர் வி ஆர் ஏ அன்பு , திமுக மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் தனராஜ், உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்