செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியின் பெயரை மாற்றி சட்டத்தைச் சிதைத்து நூறு நாள் வேலை கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை முடக்க நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசையும் அதற்கு துணைபோகும் அ.தி.மு.க.வை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அச்சிறுப்பாக்கம் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஒரத்தி கே.கண்ணன்,ஒன்றிய செயலாளர்கள் டி.வி.கோகுலகண்ணன்,ஜி, தம்பு, பேரூர் செயலாளர் வி,டி,ஆர்,எழிலரசன் டி.ஆர்.நாராயணன் வி.டி.ஆர்.வி.எழிலரசன்
ஜியாவுதீன், மாலதி, வசந்தா, நந்தினி, ஆகியோர் முன்னிலையில் மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திமுக விடுதலை சிறுத்தைகள் கட்சி காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக, மநீம, தவாக, உள்ளிட்ட கட்சியின் மாநில மாவட்ட ஒன்றிய பேரூர் நிர்வாகிகள் கிளைக் கழக முகாம் செயலாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மதசார்பற்ற கூட்டணி நிர்வாகிகள் உள்ளிட்ட 1000,க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *