அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:

அரியலூரில் நடந்தது தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்வர் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஆகியோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அரியலூர் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஒப்பாரி முழக்கப் போராட்டம் நடந்தது

போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பைரவன் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் ஏ எஸ் ஆர் அம்பேத்கார் மாவட்ட துணை தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்று பேசினர் அரியலூர் மாவட்ட அரசு அலுவலர்கள் சங்க செயலாளர் எம்கேஷேக்தாவூத் சிறப்புரையாற்றினார் மாவட்ட இணைச் செயலாளர் உதயசூரியன் ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர் மீன்வளத்துறை சின்னசாமி சத்துணவு சங்கம் காந்தி ஓய்வூதியர் சங்கம் காமராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்

மாநிலத் துணைத் தலைவர் எஸ் மகேந்திரன் நிறைவு உரையாற்றினார் மாவட்ட பொருளாளர் மூர்த்தி வருகை தந்த அனைவருக்கும் நன்றி கூறினார் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற வழக்கு தீர்ப்பின்படி பணிகாலமாக முறைப்படுத்த வேண்டும் மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்து விட வேண்டும் தனியார் மையப்படுத்துதலை கைவிட வேண்டும் மாநில நெடுஞ்சாலைகலை தமிழக அரசே பராமரிக்க வேண்டும் கிராம புற இளைஞர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *