கடலூர் மாவட்டம் வடலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிரே இந்திய தொழிற்சங்கம் சிஐடியு சார்பில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது
ஒன்றிய அரசு அமல்படுத்திய தொழிலாளர் விரோத நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வலியுறுத்தியும், மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்ற நிலையில் இதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் வடலூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே மாவட்ட சிஐடியு இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது .

வடலூர் வள்ளலார் பேருந்து நிலையத்திலிருந்து இந்தியன் ஓவர்சீஸ்வங்கி வரை ஊர்வலமாக சென்ற சிஐடியு சங்க உறுப்பினர்கள் “கார்ப்பரேட் ” முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தாதே, சமூக பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் தற்போது உள்ள நல வாரியங்களை முடக்காதே, இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு சார்பில் பொதுத்துறையை தனியாருக்கு தாரை வார்க்காதே,
உள்ளிட்ட நான்காம் அம்ச கோரிக்கைகள் திரும்பபெற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.

இவர்களின் 13 பெண்கள் உட்பட 32 பேர்களை காவல்துறையினர் கைதுசெய்து, தனியார் திருமண மண்டபத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவர்களை மாலை விடுதலை செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *