காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தங்க நாற்கர சாலை திட்ட நாயகர் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் பாரத ரத்னா அட்டல்பிகாரி வாஜ்பாய் அவர்களின் 101 வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட மீனவர் பிரிவு சார்பில் அதன் தலைவர் கபாலி தலைமையில் ஸ்ரீபெரும்புதூர் நகரில் வாஜ்பாய் அவர்களின் திருஉருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பொறுப்பாளர் ஓம்சக்தி.செல்வமணி , மண்டலதலைவர் கிரண்குமார் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்