திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சட்ட மன்ற தொகுதி குடவாசல் ஒன்றியம் சேங்காளிபுரம் ஊராட்சியை சேர்ந்த செந்தில்வேல் மகன் சக்திவேல் மத்திய பிரதேச மாநிலம், போபாலில் நடந்த 68 வது தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலப்பு ஜூனியர் மற்றும் கலப்பு யூத் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
மேலும் அங்கு நடந்த நடந்த தனி நபர் யூத் பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றுள்ளார் இதனை அறிந்த முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் சேங்காலிபுரத்தில் உள்ள சக்திவேல் இல்லத்திற்கு சென்று பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார் இந்நிகழ்வில் சக்திவேல் குடும்பத்தினர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.