திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட, மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில், பொது மக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடிகள், குற்றவழக்கில் தொடர்புடையவர்கள், போதைப் பொருட்கள் விற்றவர்கள் என இந்த ஆண்டில் 36 ரவுடிகள் உள்பட மொத்தம் 102 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணி காக்க இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என போலீஸ் கமிஷனர் காமினி தெரிவித்துள்ளார்.
மண்னை
க.மாரிமுத்து.