தஞ்சாவூர்,

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பெருமாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் வயது 19 வசந்த், இவர் கடந்த 23-ந் தேதி இரவு சுவாமிமலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது தவறி விழுந்து பலத்த காயம் அடைந்தார். இதை தொடர்ந்து கும்பகோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் தஞ்சையின் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் 24-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த வசந்த் மூளைச்சாவு அடைந்ததையடுத்து அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறுவது தொடர்பாக அவரது அப்பா சண்முகம் அவர்களுக்கு மருத்துவர்கள் எடுத்துரைத்தனர். பின்னர் அவரது உடல் உறுப்புகளை தானம் அளிக்க அவரது குடும்பத்தினரும் ஒப்புதல் அளித்தனர்.

பின்னர் வசந்தின் உடலில் இருந்த இருதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், கருவிழிகள், சிறுகுடல், தோல் ஆகியவை அறுவை சிகிச்சைமூலம் அகற்றப்பட்டது. இருதயம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் தஞ்சை ராஜா மிராஸ்தர் மருத்துவமனை, கருவிழிகள் கல்லீரல் திருநெல்வேலி தனியார் மருத்துவமனைக்கும்ம் தானமாக வழங்கப்பட்டது.

உடல் உறுப்புகள் தஞ்சை மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் போலீஸ் உதவியுடன் விரைவாக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தானத்தின் மூலம் 5 நபர்கள் பயன் பெறுகிறார்கள். பின்னர், வசந்தின் உடலுக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கல்லூரி முதல்வர் தலைமையில் அரசு இறுதி மரியாதை செய்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *