காரைக்கால் அம்மையார் திருக்குளத்தில் நடைபெறவிருக்கும் திருமலா திருப்பதி வெங்கடேச பெருமாள் ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியை முன்னிட்டு குளம் முழுவதும் உள்ள பல இடங்களில் அலங்கார வண்ண விளக்குகளை அமைப்பதற்கு நாஜிம் ஏற்பாடு செய்து அதனை இயக்கி வைத்தார்கள்…
ஏற்பாடுகள் என்பது ஊஞ்சல் உற்சவம் முடிந்த பிறகும் தொடர்ந்து இருக்கும் என்று உறுதியும் தந்தார்கள் … இனி காரைக்கால் அம்மையார் குளம் பல வண்ண விளக்குகளால் நிரந்தரமாக ஜொலிக்கப் போகிறது என்பதுதான் உண்மை… வாருங்கள் பார்ப்போம் ரசிப்போம்…
இந்த நிகழ்வில் ஆலய நிர்வாக அதிகாரி R.காளிதாசன், முன்னாள் ஆலய தனி அதிகாரி கோ.வி. ஆசைத்தம்பி, அமுதா R. ஆறுமுகம், K.R. காசிநாதன், ஓம் சக்தி ரவிச்சந்திரன், G.ராஜ்மோகன், பாரிஸ் ரவி மற்றும் ஆன்மீக நண்பர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்..!