திருவாரூரில் தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு இயக்க துவக்க விழா தங்கவேலு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தலைவர் கே.இளங்கோவன் தலைமை வகித்தார். செயலாளர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர் எஸ்.கலியபெருமாள், தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு இயக்க பொறுப்பாளர்கள் வீ.சின்னராஜ், ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் தமிழ்நாடு நில உரிமை பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கி வைத்து பேசினார், அப்போது திருவாரூர் மாவட்டத்தில் இனாம் நிலங்களை எல்லாம் அறநிலையத் துறை நிலங்கள் என்று கூறி குடியிருப்போர்க்கு வாழ்வாதாரம் பாதிக்கும் வண்ணம் அவர்களுக்கு வாடகையை நிர்ணயம் செய்து பட்டா வழங்காமல் ஆக்கிரமப்பாளர் என கருதி அவர்களை வெளியேற்றுவதற்கு அறநிலையத் துறை குறியாகவே உள்ளது.

மக்களை பாதுகாத்திட ஓட்டு போட்ட மக்களுக்கு செய்யக்கூடிய சலுகைகள் எல்லாம் செய்யாமல் அவர்களிடம் அறநிலையத் துறை செய்யும் அக்கிரமங்களை கண்டும் காணாமல் உள்ளது இந்த அரசு எனவே மக்களை பாதுகாத்திட அரசு முன்வரவில்லை என்பதற்காகத்தான் இது போன்ற சங்கங்கள் தொடங்கி மக்களை பாதுகாத்து வருகிறது என்று பேசினார். நிகழ்ச்சியில் நிறைவாக சந்திரசேகரன் நன்றி கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *