கடலூர் மாவட்டம் வடலூர் போலீசார் ஒருவருக்கு நபர் ஒருவர் போன்கால் செய்து கடலூரில் இருந்து வடலூரை நோக்கி கண்டெய்னர் ஒன்றில் பலகோடி மதிப்பிலான கறுப்புப்பணத்தைக்கடத்தி வருகிறார்கள்.

அந்த கண்டெய்னர் தற்போது வடலூர் பகுதியில் சுற்றி வருகிறது. அதை உடனே பிடியுங்கள் என்று சொல்லிவிட்டு போனை கட் செய்து விட்டார், அந்த மர்ம நபர், இதைத்தொடர்ந்து வடலூர் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் நான்குமுனை ரோடு சந்திப்பு,சத்தியஞான சபை,ஆபத்தாரணபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வாகனசோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது நெய்வேலி சாலையில் வந்து கொண்டிருந்தகண்டைனரை மடக்கிப்பிடித்து அந்த கன்டெய்னரை சோதனை செய்தனர்.அப்போது அதில் கடலூரில் இருந்து கேரளாவிற்கு மீன்ஏற்றி செல்லும் கண்டெய்னர் என தெரியவந்தது. தொடர்ந்து பெருவெளியில் சந்தேகத்திற்குரிய கண்டெய்னர் ஒன்றுநின்று கொண்டிருந்து அதனையும் சோதனை செய்தது பணம் ஏதும் பிடிபடவில்லை.போன் பேசிய மர்ம நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த போன் கால் வந்ததால் இச் சம்பவம் வடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *