இந்தியாவில் முதன் முறையாக கோவையில் டிவைன் தரங்கா நிறுவனத்தின் சார்பில் அசல் தங்கம், வெள்ளி இழைகளால் உருவான 100-க்கும் மேற்பட்ட உயர் ரக பட்டு புடைவைகள் கண்காட்சி மற்றும் விற்பனை

பெண்களுக்கு தெய்வீக அழகை தருவது புடவைகள் தான்.

அதில் முக்கியமாக பட்டு புடவைகளை விரும்பாத பெண்களே இல்லை என்ற அளவில் பட்டு புடைவைகள் உலகில் உள்ள அனைத்து இடங்களிலும் அதிகம் விரும்பும் ஆடையாக உள்ளது..

இந்நிலையில் பட்டு புடவைகளின் தயாரிப்பில் தனி டிசைன்களாக அசல் தங்கம் மற்றும் வெள்ளி இழைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டு புடவைகளை டிவைன் தரங்கா எனும் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் முதன்முறையாக கோவையில் அவினாசி சாலையில் உள்ள மெர்லிஸ் ஓட்டல் அரங்கில் டிவைன் தரங்கா நிறுவனத்தின் சார்பில் பிரம்மாண்டமான பட்டு புடவைகள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியுள்ளது.

முதன்முறையாக வாடிக்கையாளர்களே குத்துவிளக்கு ஏற்றி இந்த கண்காட்சிகளை தொடங்கி வைத்தனர்.

டிசம்பர் 27, 28 ஆகிய 2 தினங்களில் நடைபெற உள்ள இந்த கண்காட்சியில் 108 தனித்துவமான டிசைன்களை கொண்ட அசல் தங்கம், வெள்ளி ஜரிகைகள் பட்டு புடவைகள் காட்சி படுத்தப்பட்டுள்ளன.மேலும் சுமங்கலி ஜூவல்லரிசின் நகை கண்காட்சியும் உள்ளது.

இது குறித்து கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், தனித்துவமான டிசைன்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பட்டு புடவைகள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு தகுந்தபடி அவரவர்கள் விருப்பத்திலான வண்ணங்கள், டிசைன்களுடன் தயாரித்து வழங்குவதாக தெரிவித்தார்..

மேலும் கண்காட்சியில் ஏ.ஐ.தொழில் நுட்பத்தில் வாடிக்கையாளர்களின் புடவைகள் தேர்வுக்கு தகுந்தபடி அதே புடவையை அணிந்தபடி திரையில் கண்டு ரசித்து தேர்வு செய்து கொள்ளும் வசதியும் முதன் முறையாக அறிமுகபடுத்தப்பட்டுள்ளது..

சாதாரண பட்டு புடவைகள் ஏழாயிரம் ரூபாயில் துவங்கி அசல் தங்கம் வெள்ளி ஜரிகையிலான புடவைகள் ஒரு லட்சத்தில் இருந்து பத்து இலட்சம் ரூபாய் மதிப்பிலான புடவைகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *