தேனி மாவட்டம் சின்னமனூர் ஐயப்பா சேவா சங்க மணி மண்டபத்தில் 18 படி பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது சின்னமனூரில் உள்ள ஐயப்பன் பக்த பஜனை சபை சார்பில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெற்றது இதனைத் தொடர்ந்து ஐயப்ப சேவா சங்க மணி மண்டபத்தில் 18 படி பூஜை நடத்தப்பட்டது
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 18 படிகளுக்கும் பூஜைகள் நடைபெற்றது ஒவ்வொரு படியிலும் புனித நீர் கும்பங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது படி பூஜைகள் நிறைவு பெற்ற பின் படி பூஜையை காண வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
மேலும் இந்த பூஜையில் பங்கேற்ற பெண் பக்தர்களுக்கு ஜாக்கெட் துணி குங்குமம் மஞ்சள் கயிறு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்றது சுவாமி ரத ஊர்வலம் நகரில் பிரதான வீதிகள் வழியாக வந்தது திரளான பொதுமக்கள் திரண்டு நின்று சாமியே சரணம் என கோஷமிட்டனர் ஏற்பாடுகளை தேனி மாவட்ட ஐய்யப்பா சேவா சங்க தலைவரும் ஐயப்பா சேவா சங்க மணி மண்டப நிறுவனத் தலைவர் கே எஸ் பெருமாள் குருசாமி இ.லோகேந்திராஜன் உள்ளிட்ட ஜயப்பா பக்தர்கள் வெகு சிறப்பாக செய்திருந்தனர்.