கோவையில் நடைபெற்ற மார்கழி மாத இசை நாட்டிய விழா
மாருதி கான சபா சார்பாக நடைபெற்ற இதில்,இயல்,இசையுடன் பரத கலையை ஆடி அசத்திய இளம் நடன கலைஞர்கள் தமிழகத்தில் உள்ள முன்னணி இசை மற்றும் பரதநாட்டிய கலைஞர்களை கொண்டு கோவை ஆர்.எஸ் புரத்தில் ஒலி மற்றும் ஒளி அமைப்புடன் கூடிய ஸ்ரீ மாருதி கான சபாவின் மார்கழி மாத இசை விழா ஆர்.எஸ்.புரம் மாருதி கான சபாவில் நடைபெற்றது..
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்த படியாக மார்கழி மாத இசை விழாவை கொங்கு மண்டல இசை பிரியர்களும் ரசிக்கும் விதமாக நடைபெற்ற இதில்,டிசம்பர் 27 ந்தேதி துவங்கி ஜனவரி 4 ந்தேதி வரை இயல்,இசை,நாட்டியங்கள் ஒரே மேடையில் நடைபெற உள்ளது..
முன்னதாக இதற்கான துவக்க விழாவில், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன், சங்கர் குழமங்களின் இயக்குனர் மோகன் சங்கர், கலை மாமணி பார்வதி கண்டசாலா,குரு வழூவூர் பழனியப்பன்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..
நவீன ஒலி,ஒளி அமைப்புடன் கூடிய ஶ்ரீ மாருதி கான சபா அரங்கத்தில் மார்கழி மாத உற்சவமாக நடைபெற்ற இதில், பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுநர்களால் இசை, நடனம் மற்றும் நாடகங்களை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்..
இந்திய பாரம்பரிய கலைகளான இயல்,இசை,நாடகங்களை ஒரே மேடையில் கலை பிரியர்கள் கண்டு ரசிக்க ஏதுவாக மாருதி கான சபா கோவையில் இது போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த உள்ளதாக ஸ்ரீ மாருதி கான சபா நிர்வாகி விஸ்வநாதன் தெரிவித்தார்..