திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ADAF-அனைத்து துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக 21 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாவட்ட தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்து தமிழ்நாடு சத்துணவு பணியாளர் ஒன்றியத்தின் மாநில செயலாளர் ஆனந்த், மாநில மகளிர் அணி செயலாளர் லெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்து திருச்சி மாவட்ட ADAF-கள அமைப்பாளர் அன்பரசு கோரிக்கை விளக்க உரையில் பழைய ஓய்வு திட்டத்தை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்ட உரை ஆற்றினார் முடிவில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற பணியாளர் சங்கத்தின் சார்பில் கோபால்சாமி அவர்கள் நன்றி கூறினார் இக்கோட்டத்திற்கு நூற்றுக்கு அதிகமான அனைத்து துறை கிராம உதவியாளர், வேளாண்மை துறை, கால்நடைத்துறை, சத்துணவு பணியாளர், அங்கன்வாடி பணியாளர்,ஊர் புற நூலகர்,எம் ஆர் பி செவிலியர். உள்ளிட்டு சிறப்பு காலம் வரை ஊதியத்தில் பணிபுரியும் அனைத்து வகை அரசு பணியாளர்களும் கலந்து கொண்டு சங்கங்களின் நிர்வாகிகள் சிறப்பித்தனர்