மதுரையில் மின்வாரிய அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டுக்குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
அகில இந்திய தொழிற்சங்கங்களின் அறை கூவலை ஏற்று நமது மாநில தலைமையின் ஆணைக்கிணங்க மின்சார சட்ட திருத்தம் மசோதா 2025ஐ திரும்ப பெறவும், மற்றும்
அணுமின்சார சட்டத் திருத்த மசோதா 2025 ஐ பாராளு மன்றத்தில் தாக்கல் செய்வதை கண்டித்தும், தடுத்திடவும் இரண்டு மசோதாக்களை திரும்ப பெற வலியுறுத்தியும்,
அகில இந்திய அளவில் நடைபெற்ற கண்டன போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மின்வாரிய அனைத்து தொழிற் சங்கங்களின் கூட்டுக்குழுவின் சார்பில்
மதுரை /மதுரை பெருநகர் மற்றும் ஜி. சி. சி. கிளை களின் நமது எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பாக அனைத்து வட்ட பொறுப்பாளர் களும், உறுப்பினர் களும் ஓய்வு பெற்ற அமைப்பை சேர்ந்தவர்களும் இணைந்து அனைத்து வட்ட தலைமை அலுவலகங்களில் நடைபெற்ற போராட்டத்தில் அனைவரும் பங்கேற்று ஒன்றுபட்டதை நிரூபிக்கும் விதமாக மாநில செயல் தலைவர்/மதுரை வட்டக்கிளை செயலாளர் இராசாங்கம்,மதுரை பெருநகர் வட்டக்கிளை செயலாளர் டேவிட் பொன்னையா,
ஜி.சி.சி. வட்டக்கிளை. செயலாளர் சேதுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.