துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் மேற்கு ஒன்றியங்களில் தேமுதிக சார்பில் டிசம்பர் 28 ஆம் தேதி விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு குருபூஜை நிகழ்வு நடைபெற்றது.
தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனரும் நடிகருமான விஜயகாந்தின் 2ஆம் ஆண்டு நினைவு தின குருபூஜை நிகழ்வு நடைபெற்றது.
தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உத்தரவின்படி திருச்சி வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் கே எஸ் குமார் அறிவுறுத்தல் படி துறையூர் தேமுதிக மேற்கு ஒன்றிய செயலாளர் சென்னை பிரியாணி சரவணன் ஆலோசனை பேரில் வெங்கடேசபுரம், கலிங்கமுடையான்பட்டி,சேனப்பநல்லூர் ஆகிய கிளைக் கழகங்களில் நடைபெற்ற விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு குருபூஜை நிகழ்ச்சியில் தேமுதிக நிர்வாகிகள், விஜயகாந்த் ரசிகர்கள் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் மேற்கு ஒன்றிய பொருளாளர் எல்ஐசி பொன் குணசேகரன், கழகம் செல்வராஜ், மேற்கு ஒன்றிய துணைச் செயலாளர் கிருஷ்ணசாமி, வெங்கடேசபுரம் கிளைக் கழகம் கருப்பையா, கஜேந்திரன், ராமராஜ், பாஸ்கர், ஆனந்த் ,கலிங்கமுடையான்பட்டி கிளைச் செயலாளர் செல்வராஜ்,துணைச் செயலாளர் தாமரைச்செல்வன் மற்றும் ராமச்சந்திரன், பிரபாகரன், ராஜகோபால் பாக்யராஜ் மணிகண்டன், ரமேஷ், பாலமுருகன், சௌந்தரராஜன், சுப்பிரமணி, குமார்,சுப்பிரமணி உள்ளிட்ட மேற்கு ஒன்றிய தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு புகழ் அஞ்சலி செலுத்தினர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்