வலங்கைமானில் பொதுமக்கள் நெகிழி பைகளை தவிர்த்து மஞ்சள் பை பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி நிர்வாகம் நெகிழியால் சுற்றுச் சூழலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் பாதிப்பு குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையிலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், மீண்டும் மஞ்சள் பை திட்டத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, வலங்கைமான் பேரூராட்சி சார்பாக 1- வது வார்டு புதுத்தெருவில் பொதுமக்கள் அனைவரும் நெகிழி பைகளை தவிர்த்து, மீண்டும் மஞ்சள் பை பயன்படுத்துவது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்வில் வலங்கைமான் பேரூர் திமுக செயலாளர் பா.சிவநேசன், வலங்கைமான் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க.தனித்தமிழ்மாறன், 1- வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் செல்வமணி, பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், லாயம் புதுத் தெரு பொதுமக்கள் கலந்து கொண்டனர்.