நாமக்கல் மாவட்டம் கோனூர் கந்தம்பாளையத்தில் பால் விலையை லிட்டருக்கு 15 ரூபாய் உயர்த்த கோரி உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாய சங்க தலைவர் வேலுச்சாமி தலைமையில் தமிழக அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கறவை மாடுகளுடன் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்ற விவசாயிகள் சங்கத் தலைவர் வேலு சாமி மற்றும் மற்றும் இளம் விவசாயிகள் சங்க தலைவர் சௌந்தர்ராஜன் ஆகிய இருவருடன் சேர்த்து 20க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து பரமத்தி சமுதாயக்கூடத்தில் அடைத்தனர்
தமிழ்நாடு அரசு ஆவின் கூட்டுறவு ஒன்றியம் மூலம் விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் பசும் பால் மற்றும் எருமைப்பால் தற்போது கொள்முதல் பாலின் விலையில் இருந்து லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 15/= உயர்த்தி அறிவிக்க கோரி உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பலமுறை தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்தும் திமுக அரசு செவிசாய்க்காததால் தமிழகம் முழுவதும் உள்ள விவசாய சங்க அமைப்புக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் கூட்டமைப்பு சார்பில்காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் கரவை மாடுகளுடன் தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதன்படி உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் எனது தலைமையில் நாமக்கல் வட்டம் கோனூர் ஊராட்சி கந்தம்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கரவை மாடுகளுடன் மறியல் போராட்டம் நடைபெற இருந்தது இந்த போராட்டத்தை முடியடிக்கும் விதமாக பரமத்தி காவல் நிலைய ஆய்வாளர் இந்திராணி தலைமையில் காலை உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேலுசாமி அவர்களை காவல் நிலையத்தில் அழைத்து வந்து போராட்டத்தை திமுக அரசு முறியடிக்கும் விதமாக சதி செய்துள்ளது பால் கொள்முதல் விலை உடனடியாக விலை உயர்தி அறிவிக்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் 2026 ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் அன்று சென்னை கோட்டை தலைமைச் செயலகம் முற்றுகை இடும் போராட்டம் நடத்தப்படும் என உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்