வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
இந்திய பல் மருத்துவ சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட கிளையின் வருடாந்திர பொதுகுழு கூட்டம் 28.12.25 ஞாயிற்று கிழமை திண்டுக்கல் பழனி ரோட்டில் உள்ள விவேரா கிராண்ட் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியின் தலைமை கண்காணிப்பாளர் இருதயியல் மருத்துவர் Dr .S.R. வீரமணி கலந்து கொண்டு உரையாற்றினார்.
மேலும் இந்திய மருத்துவ பல் மருத்துவர்கள் சங்கத்தின் தமிழ்நாட்டின் செயலாளர் DR.செந்தாமரை கண்ணன், தேசிய துணை தலைவர் Dr. கோகுல் ராஜ் ஆகியோர் கவுரவ விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
இந்த விழாவில் திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பாக Dr. முகமது இதயதுல்லா மாவட்ட தலைவராகவும், Dr பெருமாள் செயலாளராகவும் Dr. மாரிமுத்து பொருளாளராகவும் பதவியேற்று கொண்டனர்.